ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆகும்?
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மிக விரைவிலேயே அதாவது மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
மே 1 அன்று முதல் சரக்கு இங்கிருந்து அனுப்பப்பட்டது.
வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அனுப்பப்பட்ட முதல் சரக்கு நகைகள் ஆகும்.
மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் செயலர் இதை தொடக்கிவைத்தார்.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நகைகள் அதே நாள் துபாயில் எந்த ஒரு இறக்குமதி வரியும் இல்லாமல் பெறப்பட்டது.
இதேபோல இந்தியாவிலிருந்து தோல் பொருள்கள், காலணிகள், நவரத்தின கற்கள் மற்றும் நகைகள், மரச்சாமான்கள் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.
இந்த பொருள்களுக்கு ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் எந்த ஒரு இறக்குமதி வரி விதிக்கப்படாது.
அடுத்த ஐந்து வருடங்களில் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் மிக விரைவில் அமலுக்கு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் இதுவே.
சுமார் எண்பத்தி எட்டு நாட்களில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
தற்போது இந்தியா மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே மதரீதியான சில பிரச்சினைகள் உள்ளது. ஆகவே ஒரு சில முஸ்லிம் நாடுகள் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மறுத்து வருகின்றன. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் கடைகளிலிருந்து அகற்றப்படுகின்றன.
இந்தப் பிரச்சனையை இந்தியா கவனத்தில் கொண்டு ஒரு முடிவு எடுக்கும் வரை வர்த்தகத்தில் தொய்வு என்பது தவிர்க்க முடியாதது.
Export Import Business Consultant - 91-9043441374
Comments
Post a Comment