ஏற்றுமதியாளர்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல்


ஏற்றுமதி இறக்குமதி லைசென்ஸ் புதுப்பித்தல் தொடர்பாக பல்வேறு ஏமாற்றுப் பேர்வழிகள் இந்தியா முழுவதும் பல ஏற்றுமதியாளர்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளனர்.

200 ரூபாய் கட்டணம் செலுத்தி DGFT இணையதளம் வாயிலாக நாம் இந்த லைசென்சை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு லைசன்ஸை புதுப்பித்து தராமல் ஏமாற்றும் கூட்டம் இருக்கிறது.

இதுதொடர்பாக எனது யூடியூப் சேனலில் (https://youtube.com/c/EXPORTIMPORTCONSULTANT) பல வீடியோக்களை பதிவேற்றி உள்ளேன்.

இதை உணர்ந்த DGFT தங்களது வலைத் தளத்தின் முகப்பு பக்கத்தில் இதுபற்றி ஒரு எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.

இதேபோல தற்போது APEDA நிறுவனத்தில் பதிவு செய்தவர்களிடம் இருந்து ஏமாற்றுப் பேர்வழிகள் பணம் கொள்ளை அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

APEDA நிறுவனத்தில் பதிவு செய்தவுடன் வட இந்தியாவிலிருந்து ஒரு தொலைபேசி வரும்.

அதில் பேசும் நபர் உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருகிறேன் என்று கூறி பணம் பெற்றுக் கொள்கிறார்.

அதன் பிறகு அந்த நபர் தொலைபேசியை எடுப்பதே இல்லை.

இதேபோல பலரிடமும் இந்த ஏமாற்று வேலை நடந்து வருகிறது.

புதிதாக APEDA நிறுவனத்தில் பதிவு செய்பவர்கள் இது APEDA நிறுவனத்திடம் இருந்து வந்த போன் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.

சில நேரங்களில் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் APEDA நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

இதுபோன்ற நபர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Export Import Business Consultant WhatsApp 91-9043441374


Comments