சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய ஏற்றுமதி

சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய வெங்காய ஏற்றுமதி.
உலகின் பல்வேறு நாடுகள் இந்திய வெங்காயத்தை விரும்பி வாங்குகின்றன.
கடந்த முறை இந்தியா வெங்காய விலை உயர்வால் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது.
அப்போது இந்தியா வந்திருந்த பங்களாதேஷ் பிரதமர் தனது சமையல்காரரை இடம் வெங்காய உபயோகத்தை சிறிது காலம் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக சொன்னார்.
மலேசிய மக்கள் இந்திய வெங்காயத்தைத் தவிர வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க மறுத்து அரசுக்கு இந்திய வெங்காயத்தை வாங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்திய வெங்காயத்தை சாப்பிட்டு பழகிய பல்வேறு நாடுகள் இந்திய வெங்காய ஏற்றுமதி தடை காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தன.
இந்திய வெங்காயத்தின் தரத்தில் உலகில் எந்த நாடும் வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை.
இந்திய வெங்காயத்தின் விலையை ஒத்து எந்த நாடும் வெங்காயத்தை ஏற்றுமதியும் செய்யமுடியவில்லை.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் இந்திய வெங்காய ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியாவிடமிருந்து அதிக அளவில் வெங்காயத்தை வாங்கும் நாடுகள் பங்களாதேஷ், மலேசியா, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா.
கடந்த வருடம் பங்களாதேஷ் 100 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது.
மலேசியா மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் தலா 44 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வெங்காயத்தை இறக்குமதி செய்தன.
ஸ்ரீலங்கா 42 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்தது.
தற்போது சிறிலங்காவில் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருப்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் வியாபாரம் செய்ய தயங்குகின்றனர்.
ஏற்கனவே டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்திற்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை.
ஸ்ரீலங்கா நாட்டில் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்கு அவர்களால் பணம் கொடுக்க முடியவில்லை.
ஆகவே இப்போது வெங்காய ஏற்றுமதிக்கு முக்கிய மார்க்கெட்டுகளில் ஒன்றான சிறிலங்காவை இந்தியா இழந்துள்ளது.
பங்களாதேஷ் நாடு நாம் அடிக்கடி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால் கடந்த வருடம் ஒரு முக்கிய முடிவெடுத்தது.
உள்நாட்டில் வெங்காய விளைச்சலை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் விளைவாக இந்த வருடம் அங்கு மிகப்பெரிய அளவில் வெங்காய உற்பத்தி நடைபெற்றுள்ளது.
உள்நாட்டில் வெங்காய உற்பத்தி செய்த விவசாயிகளையும் வியாபாரிகளையும் காக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இறக்குமதி வரியை அமல்படுத்தியது.
2.80 டாக்கா பணம் ஒரு கிலோவிற்கு இறக்குமதி வரியாக விதிக்கப்படுகிறது.
எதனால் இந்த வருடம் பங்களாதேஷ் இற்கான வெங்காய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒவ்வொரு முறை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் போதெல்லாம் நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளை குறிவைத்து பாகிஸ்தான் மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் வெங்காய ஏற்றுமதியை துரிதப்படுத்தி இருந்தன.
ஆனால் இந்திய வெங்காயத்தின் தரம் மற்றும் விலை காரணமாக நமது ஏற்றுமதி தடை விலக்கிக்கொள்ளப்பட்டது அந்த நாடுகள் மீண்டும் இந்தியாவை நோக்கி வந்தன.
உள்நாட்டில் வெங்காய விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை சரிவர நிர்வாகிக்க காரணத்தால் நாம் இன்று பங்களாதேஷ் மூலம் வருடந்தோறும் 100 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கத் துவங்கி இருக்கிறோம்.
இப்போது நமது கையில் இருக்கும் இரண்டு நாடுகள் மலேசியா மற்றும் அரபு எமிரேட்ஸ்.
WhatsApp 91-9043441374

Comments