ஏற்றுமதியில் மீண்டும் சாதனை நிகழ்த்தும் நாசிக்

மற்றொரு சாதனையை நிகழ்த்தும் நாசிக் மாவட்டம்.

வெங்காயம் என்றாலே நாசிக் தான் நமக்கு ஞாபகம் வரும்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த நாசிக் மாவட்டத்தில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது.
இப்போது நாசிக் திராட்சை ஏற்றுமதிக்கு உகந்த மாவட்டமாக விளங்குகிறது.
நாசிக் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல நாடுகளுக்கும் உயர்தரமான திராட்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வருடம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் டன்கள் அளவிற்கு நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டும் திராட்சை ஏற்றுமதியாகியுள்ளது.
அதில் 92 ஆயிரம் டன்கள் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மற்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இதே நாசிக்கில் இருந்து வருடம் சுமார் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் டன்கள் அளவிற்கு திராட்சை இறக்குமதி செய்தன.
இந்த முறை இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதால் வெறும் 2,600 டன் கள் மட்டுமே இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வருடாவருடம் இங்கிருந்து ஏற்றுமதியாகும் திராட்சை மற்றும் பயிரிடப்படும் நிலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மிக விரைவில் நாசிக் என்றாலே வெங்காயம் என்பது மறந்து  திராட்சை ஞாபகம் வரும் அளவிற்கு ஏற்றுமதியில் சாதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Export Import business consultant - WhatsApp - 91-9043441374

Comments