பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்ட மற்றொரு நாடு.
சமீபத்தில் இலங்கை மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது.
அன்னியச் செலாவணி பெருமளவு குறைந்தது.
மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக காத்துக்கிடக்கும் நிலை உண்டானது.
நாட்டின் பண மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
இந்தியா சீனா உட்பட பல நாடுகளில் உதவித்தொகையை எதிர்பார்த்து இருக்கிறது இலங்கை.
பெட்ரோல், டீசலுக்கு ஆக கிலோமீட்டர் கணக்கில் மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட இதே போன்ற நிலையில் இருக்கும் மற்றொரு நாடு நேபாளம்.
கடந்த சில வருடங்களாகவே நோய் தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்தது.
நேபாள நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர்.
அவர்களும் நோய் தொற்று காரணமாக பொருளாதார சவால்களை எதிர்கொண்டு உள்ளனர்.
ஆகவே முன்புபோல் அவர்களால் தாய்நாட்டிற்கு பணம் அனுப்ப முடியவில்லை.
இப்படிப் பெருமளவு அந்நிய செலாவணி வரத்து குறைந்ததால் நேபாள அரசு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
அத்தியாவசியம் அல்லாத பொருள்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான தடை நேபாளத்தில் அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசியமான பொருள்களான காய்கறிகள் பழங்கள் போன்றவற்றுக்கு எந்த ஒரு இறக்குமதி தடையுமில்லை.
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆறு கோடி ரூபாய்க்கு காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்யும் நாடு நேபாளம்.
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment