சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை சந்திக்கும் இந்தியா..

சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய பின்னடைவை சந்திக்கும் இந்தியா.

அரிசி மற்றும் கோதுமை போன்ற பல தானியங்கள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் இந்தியா, தாவர எண்ணெய்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின்தங்கியுள்ளது.
பாமாயில் பயன்பாட்டில் 50% இந்தோனேசியா நாட்டை நம்பி இந்தியா உள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியா நாடு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இதனால் இந்தியா மட்டுமல்ல பங்களாதேஷ் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
பங்களாதேஷின் பாகிஸ்தானும் தங்களது 80 சதவீத பாமாயில் தேவையை இந்தோனேசியா விடமிருந்து பெறுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதால் இது சற்று ஆறுதலான விஷயம்.
கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதிக்கவில்லை.
இந்தோனேசியாவுக்கு மாற்று ஏற்பாடாக இந்தியா இப்போது மலேசியாவை மட்டுமே நம்பி உள்ளது.
ஆனால் உலக நாடுகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு மலேசியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிக குறைவு.
சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் நாடான உக்ரேன் தற்போது போர் பாதிப்பில் உள்ளதால் அந்த நாடும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
சோயா எண்ணெய் ஏற்றுமதிக்கு அர்ஜென்டினா தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் விளைச்சல் குறைந்த காரணத்தால் அந்த நாடு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவால் உலகின் பல்வேறு நாடுகளோடு சேர்ந்து அர்ஜெண்டினாவின் பாதிக்கப்படும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்து.
ஏனென்றால் சோயா எண்ணெய் ஏற்றுமதி மூலம் 32 சதவீத வரி வருவாய் அர்ஜெண்டினா நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்தது.
இந்த ஏற்றுமதி தடை மூலம் அந்த வரி வருவாய் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தாவர எண்ணெய் ஏற்றுமதியில் இருந்தாலும் அங்கிருந்து தாவர எண்ணை இறக்குமதி செய்வது என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும்.
WhatsApp 91-9043441374

Comments