எளிதில் கெட்டுப் போகும் பொருளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்தது எப்படி?

பறித்தவுடன் கெட்டுப்போகும் பொருளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்தது எப்படி?

புனே மாநிலம்.
புரந்தர் தாலுகா உலகில் எங்கும் கிடைக்காத பிரத்தியேக அத்திப் பழத்திற்கு புகழ் பெற்ற இடம்.
நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது.
புவிசார் குறியீடு பெற்றது.
ஆனால் மிகப்பெரிய சவால் என்னவென்றால் பறித்த சில மணிநேரத்தில் கெட்டுப் போய்விடும்.
ஆகவே இதைப் பயிரிடும் விவசாயிகள் உள்ளூர் அளவிலேயே விற்பனை செய்ய முடிந்தது.
ஆனால் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை விவசாயிகள் கண்டு கொண்டனர்.
இதுபோன்ற அத்திப்பழத்தை பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பித்தனர்.
அதே நேரத்தில் இந்த அத்திப்பழத்தின் ஆயுளை அதிகரிக்க தேவையான ஆராய்ச்சியை தீவிரமாக மேற்கொண்டனர்.
பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பதிவு பெற்ற உணவு ஆராய்ச்சியாளர்களின் உதவியை நாடினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெற்றி கிட்டியது.
அத்திப்பழத்தின் ஆயுளை அவர்களால் 15 நாட்களுக்கு நீடிக்க முடிந்தது.
ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் முதல் கட்டமாக அத்தி பழத்தை வாங்கி ஜெர்மனியில் விற்பனை செய்தது.
புனேவில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அத்திப்பழம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அடுத்து அடுத்து ஏற்றுமதி ஆர்டர்கள் வரத் துவங்கின.
இப்போது ஜெர்மனி முழுவதும் இந்த அத்திப்பழம் கிடைக்கிறது.
அந்த நிறுவனம் இங்கு உள்ள விவசாயிகளை மேலும் பயிரிட ஊக்கப்படுத்துகிறது.
நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் இந்திய புவிசார் குறியீடு பெற்ற இந்த அத்திப்பழத்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி தரும்.
Export business Consultant - WhatsApp 91-9043441374

Comments