பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா.
இந்தியாவிலிருந்து பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி தற்போது விண்ணைத் தொட்டுள்ளது.
உலக அளவில் பாசுமதி அல்லாத அரிசி மார்க்கெட்டில் சுமார் 50% இந்தியா கைப்பற்றியுள்ளது.
நோய்தொற்று காலத்தில் இந்தியாவில் விவசாயம் பாவிக்கப்படவில்லை.
அதே காலகட்டத்தில் நமக்கு அரிசி ஏற்றுமதியில் போட்டியாளராக உள்ள தாய்லாந்து மற்றும் வியட்நாமில் விவசாயம் பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது இந்திய அரிசி ஏற்றுமதிக்கு சாதகமாக அமைந்தது.
தற்போது உலகிலுள்ள பல நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவையே தேர்வு செய்கின்றன.
5% உடைந்த பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளும், விலையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இந்தியா:
ஒரு டன் அரிசியின் விலை 365 டாலர்கள் முதல் 369 டாலர்கள் வரை.
தாய்லாந்து:
ஒரு டன் அரிசியின் விலை 408 டாலர்கள் முதல் 412 டாலர்கள் வரை.
வியட்நாம்:
ஒரு டன் அரிசியின் விலை 400 டாலர்கள் முதல் 415 டாலர்கள் வரை.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
Comments
Post a Comment