ஏற்றுமதியை அதிகரிக்க APEDA வின் புதிய முயற்சி
அபிடா நிறுவனம் தனக்கு கீழ் வரும் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
தற்போது மாம்பழ சீசன்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாம்பழம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த வருடம் தெலுங்கானா மாநிலத்தில் 5000 டன்கள் அளவிற்கு மாம்பழம் விளைவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதில் கணிசமான அளவை ஏற்றுமதி செய்ய ஒரு வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டது APEDA.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மாம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை மாம்பழ ஏற்றுமதியாளர்கள் உடன் சந்திக்க வைத்தது.
இதுவரை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சந்திப்பை நடத்தி வந்த இந்த நிறுவனம் தற்போது ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு முக்கியமான நிகழ்வு.
தரமான மாம்பழங்களை தேடிக்கொண்டிருந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
விவசாயிகளுக்கும் தங்களது மாம்பழங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிந்தது.
இதேபோன்ற நடைமுறையை எதிர்காலத்தில் பல்வேறு விவசாய பொருள்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு வர APEDA திட்டமிட்டுள்ளது.
EXPORT IMPORT BUSINESS CONSULTANT - WHATSAPP - 91-9043441374
Comments
Post a Comment