இந்தியா-ஆஸ்திரேலியா உருவான புதிய வர்த்தக வாய்ப்புகள்

இந்தியா - ஆஸ்திரேலியா உருவான புதிய வர்த்தக வாய்ப்புகள்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இந்தியா ஆஸ்திரேலியா இரண்டு நாடுகளும் இருநாட்டு வர்த்தக உறவு கொள்கையை உருவாக்கி வந்தனர்.
அது சமீபத்தில் தான் முழுமை பெற்றுள்ளது.
இதன் மூலம் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இது இரு நாட்டு வர்த்தகர்களுக்கும் பல்வேறு சாதகங்களை கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் தொண்ணூத்தி ஆறு சதவீத பொருள்களுக்கு ஆஸ்திரேலியாவில் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் 85 சதவீத பொருள்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி கிடையாது.
கீழ்க்கண்ட பொருள்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1. ஆஸ்திரேலியாவில் தயாராகும் உயர்ரக ஒயின் வகைகள்.
2. நிலக்கரி.
3. இறைச்சி.
4. மாசிடோனியா எனப்படும் ஒரு பருப்பு வகை.
5. கம்பளி.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கீழ்க்கண்ட பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் முற்றிலுமாக வரி விளக்கு செய்யப்பட்டுள்ளது.

1. மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள்.
2. டெக்ஸ்டைல் பொருள்கள்.
3. இன்ஜினியரிங் பொருள்கள்.
4. தோல் பொருள்கள்.
5. நவரத்தின கற்கள் மற்றும் நகைகள்.

கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரி விலக்கு என்பது கொடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் உள்நாட்டில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்து விடக்கூடாது என்பதே. ஆனால் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை ஏதும் இல்லை.

1. பால் மற்றும் பால் பொருட்கள்.
2. சுண்டல் வகைகள்.
3. வால்நட்.
4. கோதுமை.
5. அரிசி.
6. ஆப்பிள்.
7. சூரியகாந்தி விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்.
8. சர்க்கரை.
9. புண்ணாக்கு.

WhatsApp 91-9043441374

Comments