மூன்றாவது அதிக ஏற்றுமதி வாய்ப்பை வழங்கும் தானியம்.
இந்தியாவில் அதிக அளவில் தானியங்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தானிய ஏற்றுமதியில் அரிசி முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் கோதுமை.
மூன்றாமிடத்தில் தானியங்களின் ராணி என்றழைக்கப்படும் மக்காச்சோளம்.
கடந்த 10 மாதங்களில் சுமார் 800 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிலிருந்து மக்காச்சோளம் ஏற்றுமதியாகியுள்ளது.
மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம்.
நம்மிடம் இருந்து அதிக அளவு மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் பங்களாதேஷ் மற்றும் மியான்மர்.
இது தவிர்த்து நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகள் இந்த முறை மக்காச்சோளத்தை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளன.
வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளும் மக்காச்சோளத்தை இதுவரை ரஷ்யாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்து கொண்டிருந்தன.
தற்போது இரு நாட்டுக்கும் இடையே போர் நடப்பதால் இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவில் இருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்கின்றன.
Export Import business consultation - WhatsApp 91-9043441374
Comments
Post a Comment