உலக நாடுகளில் அதிகரிக்கும் தேவை.. நல்ல லாபத்தில் ஏற்றுமதி செய்யும் இந்தியா

உலக நாடுகளில் அதிகரிக்கும் தேவை.. நல்ல லாபத்தில் ஏற்றுமதி செய்யும் இந்தியா..

நடப்பு நிதியாண்டில் இந்தியா 10 மில்லியன் டன்கள் அளவிற்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்துள்ளது.
இதற்காக மத்திய அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு விவசாய அமைச்சகம் ரயில்வே அமைச்சகம் மற்றும் கடல் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து செயலாற்றும்.
மேலும் அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து கோதுமை ஏற்றுமதிக்கான அனைத்து உதவிகளையும் செய்யும்.
கடந்த வருடம் இந்தியா ஏழு மில்லியன் டன்கள் அளவிற்கு கோதுமை ஏற்றுமதி செய்தது.
இதன் மதிப்பு 2.05 பில்லியன் டாலர்கள்.இதில் பாதி அதாவது 50% பங்களாதேச நாட்டிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோதுமை ஏற்றுமதி விலை ஒரு டன் 370 டாலர்கள் முதல் 380 டாலர்கள் வரை உள்ளது.
இந்த விலை மிக விரைவில் 400 முதல் 430 டாலர்கள் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் நாம் செய்யப்போகும் கோதுமை ஏற்றுமதி மதிப்பு 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுபோக, APEDA ஒரு தனிக்குழு அமைத்து, கோதுமை தேவை அதிகம் உள்ள நாடுகளுக்கு இந்த குழுவை அனுப்பி, ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தக் குழு வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, துருக்கி, லெபனான், அல்ஜீரியா, துனிசியா, எகிப்து, மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளுக்கு பயணிக்கும்.

கோதுமை அதிக அளவில் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் இரண்டு நாடுகள் உக்ரைன் மற்றும் ரஷ்யா.
உலகத் தேவையில் 25 சதவீதத்தை இந்த இரண்டு நாடுகளுமே நிரப்புகின்றன.
இந்த நாடுகள் தற்போது போரில் ஈடுபட்டுள்ளதால் அந்த வியாபார வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு கழகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதி அதிகரிப்பதால் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியது.
நமது நாட்டின் ஒட்டுமொத்த கோதுமை தேவையை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மிக விரைவில் அறுவடை முடிந்து பல லட்சக்கணக்கான டன்கள் கோதுமை இந்திய உணவு பாதுகாப்பு கழகத்திற்கு வந்து சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆகவே நாம் உள்நாட்டு விலை ஏற்றத்தை பற்றி கவலைப்படாமல் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம்.

Export Import Business Consultant - WhatsApp 91-9043441374

Comments