இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்பிள் இறக்குமதி செய்கிறது.
அவற்றில் ஒரு முக்கியமான நாடு துருக்கி.
கடந்த ஐந்து வருடகாலத்தில் துருக்கியிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் ஆப்பிள் இரண்டு மடங்காகி இருக்கிறது.
அதாவது ஆப்பிள் இறக்குமதி வருடா வருடம் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.
இந்தியாவில் 40 சதவீத ஆப்பிள் மார்க்கெட்டை கையில் வைத்திருப்பது துருக்கி ஆப்பிள்.
இந்தியாவில் துருக்கி ஆப்பிளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு சில இறக்குமதியாளர்கள் துருக்கி நாட்டில் உள்ள சிறிய இறக்குமதியாளர்கள் மூலம் தரமற்ற ஆப்பிளை இறக்குமதி செய்கின்றனர்.
இதன் மூலம் அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
இந்திய மக்கள் அளவு பெரிதாகவும் நல்ல நிறத்துடன் கூடிய ஆப்பிளை மட்டுமே விரும்பி வாங்குகிறார்கள்.
ஆகவே துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது இதுபோன்ற ஆப்பிள் தான் அங்கிருந்து ஏற்றுமதி ஆகிறதா என்பதை இந்திய இறக்குமதியாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment