பழைய காகிதங்கள் மற்றும் காகித கழிவுகள் - இறக்குமதி தொழில் வாய்ப்பு.

பழைய காகிதங்கள் மற்றும் காகித கழிவுகள் - இறக்குமதி தொழில் வாய்ப்பு.

நமது நாட்டில் இ-காமர்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இ-காமர்ஸ் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளின் மூலப்பொருள் பழைய மற்றும் கழிவு காகிதங்கள்.
மேலும் மருத்துவத்துறை, டெக்ஸ்டைல் துறை போன்ற பல துறைகளில் உள்நாட்டிலும் ஏற்றுமதியிலும் இதுபோன்ற அட்டைப் பெட்டிகளின் தேவை பெரிய அளவில் உள்ளது.
இந்த தேவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் நம் நாட்டில் பழைய காகிதங்கள் அல்லது கழிவு காகிதங்கள் கிடையாது.
பெரும்பாலும் நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் திடீரென ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இந்தியாவிற்கு பழைய காகிதங்கள் மற்றும் கழிவு காகிதங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.
இது இந்திய இறக்குமதியாளர் களுக்கு ஆச்சரியத்தை தந்தது.
இந்திய அரசு மூலமாக ஏன் இந்த தடை என்று விசாரித்தபோது ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு கொடுத்த பதில் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது.
இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக நடந்த ஒரு தவறு, மிக விரைவில் மீண்டும் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்கள்.
உலகில் பல்வேறு விஷயங்களில் பல நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற ஒரு தவறு செய்தது இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நவம்பரில் விதிக்கப்பட்ட தடை தற்போது மார்ச் 31ம் தேதியே விலக்கப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் பழைய காகிதங்கள் மற்றும் கழிவு காகிதங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய எந்த தடையும் இல்லை.
இதன் விளைவாக இந்தியாவில் அட்டைப் பெட்டிகளில் விலையும் பழைய காகிதங்களின் விலையும் குறையத் தொடங்கியது.
அமெரிக்காவில் இருந்து நாம் இது போன்ற பழைய காகிதங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு வருவதற்கு சுமார் 30 நாட்களில் இருந்து 45 நாட்கள் வரை ஆகும்.
இன்னும் ஒரு மாத காலத்தில் அதிக அளவு பழைய காகிதங்கள் மார்க்கெட்டுக்கு வந்து சேரும்போது பழைய காகிதங்களின் விலையும் அட்டைப் பெட்டிகளின் விலையும் மீண்டும் குறைவதற்கு வாய்ப்புண்டு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments