ஏற்றுமதியாளர்களுக்கு தமிழக அரசு சலுகை

ஏற்றுமதியாளர்களுக்கு சலுகையை அறிவித்த தமிழக அரசு.

உணவுப் பொருள் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தரச் சான்று பெறும் நடைமுறை.

உணவுப்பொருளில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மை பற்றிய தரச் சான்றிதழை பெறுவதற்கு அதிக செலவு பிடிக்கும்.

சில இறக்குமதியாளர்கள் இந்த செலவை ஏற்றுக் கொள்வது உண்டு.

ஆனால் பல இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

முதன்முறையாக இதுபோன்ற நச்சுத் தன்மையை அறியும் தரச்சான்றிதழ் பெரும் ஏற்றுமதியாளர்கள், கீழ்க்கண்ட லிங்க் மூலம் தேவையான ஆவணங்களை பதிவேற்றி தர சான்றிதழுக்கான செலவில் 50 சதவீதம் அல்லது பத்தாயிரம் இதில் எது குறைவோ அதை தமிழக அரசு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

http://agrimark.tn.gov.in/MRS/exporter

மார்ச் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதிக்கு முன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.

WhatsApp 91-9043441374


Comments