சமீபத்தில் நான் ஒரு பழைய நண்பரை சந்தித்தேன்.
அவர் ஒரு ஏற்றுமதியாளர்.
அமெரிக்க நாட்டிற்கு துணி வகைகளை ஏற்றுமதி செய்கிறார்.
பல வருடங்களாக இந்தத் தொழில் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆர்டர்கள் கிடைக்கும்.
நண்பர் எப்போதும் டென்ஷனாக காணப்படுவார்.
வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி எப்போதும் கத்திக் கொண்டே இருப்பார்.
அவர் முகத்தில் புன்னகை பார்க்கவே முடியாது.
அவர் அமைதியாக இருந்து நான் பார்த்ததேயில்லை.
ஆனால் நான் அன்று அவரை சந்தித்த போது அவர் அமைதியாக காணப்பட்டார்.
புன்னகையுடன் பேசினார்.
இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
மெல்ல அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
அவரது சந்தோஷத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்பட்டேன்.
குடும்பம் பற்றியும் தொழில் பற்றியும் விரிவாகப் பேசினோம்.
சிறிது நேரத்தில் எனக்கு காரணம் புரிந்து விட்டது.
அவரது மைத்துனர் சொந்தமாக ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார்.
ஏற்றுமதிக்காக தேவைப்படும் நூலை அவரது மில்லில் இருந்து கடனுக்கு பெற்றுள்ளார் நண்பர்.
பெரிய அளவிலான நூல் மூட்டைகளை வாங்கி தனது குடோனில் இருந்து வைத்துள்ளார்.
மாதமாதம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நூலுக்கான பணத்தை கொடுப்பதாக ஒப்பந்தம்.
ஒப்பந்தத்தின்படி நண்பரும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கொடுத்து உள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் நூல் விலை அதிரடியாக உயர்ந்து விட்டது.
ஆனால் பழைய விலைக்கு நூல் வாங்கியதால் நண்பருக்கு தொழிலில் நல்ல லாபம்.
அமெரிக்க இறக்குமதியாளர் மிகவும் கறாரான பேர்வழி.
ஆயத்த ஆடைகள் தயாரிப்பதில் இருந்த அனுபவமும் கொண்டவர்.
ஒவ்வொரு முறை புதிய ஆடர் வரும்போதெல்லாம் நண்பர் அதற்கான கொட்டேஷன் கொடுக்கும்போது இறக்குமதியாளர் கடுமையாக பேரம் பேசுவார்.
பல்வேறு நாடுகளில் ஆயத்த ஆடை தொழில் சம்பந்தமான செய்திகள் விரல் நுனியில் வைத்திருப்பார் அமெரிக்க இறக்குமதியாளர்.
சில நேரங்களில் திருப்பூரில் என்ன விலைக்கு நூல் விற்பனையாகிறது என்பதை நண்பருக்கே சொல்லி ஆச்சரியப் படுத்துவார்.
இப்படி கறாரான இறக்குமதியாளர் உடன் வர்த்தகம் செய்யும் நண்பர் மிகக் குறைந்த லாபத்திற்கு தொழில் செய்ய முடிந்தது.
ஆனால் பண விஷயத்தில் காலதாமதம் செய்ய மாட்டார் இறக்குமதியாளர்.
ஆகவேதான் இருவருக்குமிடையே தொழில் பல காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது உக்ரைன் ரஷ்யா போரினால் இந்திய ரூபாயின் மதிப்பு விழுந்திருக்கிறது.
இந்த ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு ஜாக்பாட்.
ஒவ்வொரு முறையும் புதிய ஆடர் தரும்போது மிகவும் கறாராக பேரம் பேசும் இறக்குமதியாளர் இந்த அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை கவனிக்கத் தவறிவிட்டார்.
இது தான் சரியான தருணம் என்று உணர்ந்த நண்பர் தொடர்ந்து ஏழு ஆர்டர் களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டு விட்டார்.
நூல் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் வீழ்ச்சி ஆகிய இரண்டும் இவருக்கு இரு மடங்கு லாபத்தை கொடுத்திருக்கின்றன.
இதுவே நண்பரின் மகிழ்ச்சி காரணம்.
Export Business Consultant
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment