ஐந்து ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

அபிடா நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐந்து ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும் ஏஜென்சி களை ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளின் அறிவுறுத்தலின் பேரில் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நிறுவனங்கள் சான்று அளித்த உணவுப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டிருந்தது.

அந்த உணவுப் பொருட்களில் எத்திலின் ஆக்சைடு எனப்படும் வேதிப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளின் உணவுப் பொருள் தரக்கட்டுப்பாட்டு வரைமுறைக்கு உட்பட்டதாக போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கலாம் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.

அதன்படி கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு அபராதம் உட்பட ஒரு வருட காலத்திற்கு ஆர்கானிக் சான்றிதழ்கள் வழங்குவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

EU inspections India private limited
ECOCERT India private limited
Indian organic certification agency
OneCert International private limited
Aditi organic certification private limited.

Export Import consultant
WhatsApp 91-9043441374

Comments