யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க 10 வழிகள்.
1. யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம்:
அனைவருக்கும் தெரிந்த மிக எளிமையான ஒரு வழி. கடந்த 365 நாட்களில் ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணிநேர பார்வைகள் பெற்றிருந்தால் நீங்கள் விளம்பரம் மூலம் வருவாய் பெறுவதற்கு தகுதி பெற்றவர் ஆவீர்கள்.
2. சேனல் மெம்பர்ஷிப்:
இந்த முறையில் நீங்கள் ஆரம்ப காலத்தில் பணம் சம்பாதிக்க இயலாது. நிறைய சப்ஸ்கிரைபர்கள் பெறும் பட்சத்தில் நீங்கள் வருவாய் ஈட்டுவதற்கு மிகவும் பயனுள்ள முறை இது.
3. பொருள்களை விற்பனை செய்வது:
யூடியூப் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இல்லாமல் தொழில் செய்வதற்கு ஏற்ற சாதனமாக மாற்ற முடியும். நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையோ அல்லது வாங்கி விற்பனை செய்யும் பொருட்களையோ யூ டியூப் மூலமாக உலகம் முழுவதும் விற்பதற்கு வாய்ப்பு உள்ளது.
4. ஒரு பிராண்டை புரமோட் செய்வது:
இன்று பல பிராண்டுகள் தங்களது பொருட்களை விளம்பரம் செய்வதற்காக அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள யூடியூப் சேனலை நாடுகின்றனர். அவர்களது பொருள்களை நீங்கள் உபயோகித்துப் பார்த்து ரிவ்யூ செய்யும் போது அந்த பொருளின் விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் ஒரு யூடியூபர் பணம் சம்பாதிக்கலாம்.
5. அப்ளியேட் மார்க்கெட்டிங்:
அமேசான் இணையதளம் உட்பட பல்வேறு இணைய தளங்களில் நீங்கள் ஒரு அப்ளியேடராக இணைந்து அதில் உள்ள பொருட்களை உங்களது யூடியூப் சேனல் மூலமாக பிரமோட் செய்து சம்பாதிக்க முடியும்.
6. யூடியூப் பிரிமியம்:
யூடியூபில் விளம்பரத்தை பார்க்க விரும்பாத நபர்கள் ஒரு சிறிய அளவு பிரீமியம் தொகையை கட்டி விளம்பரமில்லாமல் எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழலாம். அந்தப் பிரீமியத்தில் ஒரு பகுதி யூட்யூப் எடுத்துக்கொண்டு மற்றவற்றை அவர்கள் எந்தெந்த சானலில் வீடியோக்களை பார்க்கிறார்களோ அந்த சேனல் உரிமையாளர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.
7. சூப்பர் சாட்:
யூடியுப் மூலம் நேரலை நிகழ்ச்சி நடத்தும்போது சூப்பர் சாட் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டு.
8. பொருளை விளம்பரப்படுத்துதல்:
பிராண்ட் அல்லாத ஒரு பொருளை உங்கள் சானலில் ரிவியூ செய்வதன்மூலம் அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கும். இப்படி ரிவ்யூ செய்வதற்காக நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் சேனலில் அதிக சப்ஸ்கிரைபர்கள் வரும்போது இதுபோன்ற நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
9. சேவை விளம்பரம்:
பிராண்ட் அல்லாத ஒரு சேவையை உங்கள் சானலில் ஒரு பொருளை எப்படி விளம்பரம் செய்கிறோமோ அதேபோல விளம்பரம் செய்வதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். அதன் மூலம் சம்பாதிக்கலாம்.
10. உள்ளூர் சார்ந்த தொழில்கள்:
உங்கள் ஊரில் உள்ள பல்வேறு தொழில்களை நீங்கள் உங்கள் சேனலின் மூலம் விளம்பரப்படுத்தும் போது அந்த குறிப்பிட்ட தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருந்து கிடைப்பார்கள். இப்படி ஒரு தொழிலை புரமோட் செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம்.
ஒரு தனிநபர் யூடியூப் சேனல் ஆரம்பித்து வெற்றிகரமாக சம்பாதிக்கும் வழிமுறைகளை விளக்கம் ஒரு முழுமையான ஆன்லைன் வகுப்பு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே. இந்த வகுப்பில் பங்கேற்க Youtube Course என்று 91-9043441374 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்புங்கள்.
Comments
Post a Comment