ஒரு விவசாயி ஏற்றுமதியாளராக மாறியது எப்படி?

ஒரு விவசாயி ஏற்றுமதியாளராக மாறியது எப்படி?

தனது தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் திண்டுக்கல் விவசாயியை பற்றி தெரிந்து கொள்வோம்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி தேங்காய் உள்ளிட்ட ஒரு சில பொருட்களை தனது வயலில் விளைவித்து வருகிறார்.

அவர் தனது வயலில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை.

ஒரு சமயம் திண்டுக்கல்லில் உள்ள விவசாய அலுவலகத்திற்கு சென்ற போது, அமெரிக்காவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை தற்செயலாக தெரிந்து கொண்டார்.

ஒரு விவசாய அதிகாரி அவருக்கு இந்தத் தகவலை கூறினார்.

இந்த விவசாயி தானும் பல தலைமுறைகளாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருவதாக அந்த அதிகாரியிடம் கூறி இருக்கிறார்.

உடனடியாக அந்த அதிகாரி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து உதவியுள்ளார்.

சுமார் மூன்று மாத காலத்திற்கு உள்ளாகவே அவருக்கு முதல் ஆர்டர் கிடைத்தது.

ஆரம்ப காலகட்டத்தில் 5 டன் மற்றும் 10 டன் அளவிற்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்தார்.

மேலும் ஒரு புதிய இறக்குமதியாளர் கிடைக்கவே இப்போது மாதம் சுமார் 22 டன்கள் அளவிற்கு அமெரிக்காவிற்கு தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை ஏற்றுமதி செய்து கொண்டுள்ளார்.

ஏற்றுமதி லைசென்ஸ் பெறுவது முதல் இயற்கை விவசாய சான்று பெறுவது வரை அனைத்தும் அந்த வேளாண் அதிகாரி சொல்லிக் கொடுத்தபடி செய்து, இன்று ஒரு விவசாயி ஏற்றுமதியாளராக மாறி இருக்கிறார்..
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments