கொட்டிக்கிடக்கும் பிளாஸ்டிக் ஏற்றுமதி வாய்ப்புகள்

பிளாஸ்டிக்கை ஏற்றுமதியில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்.

பிளாஸ்டிக் மூலப்பொருள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மங்களூரில் பிளாஸ்டிக் பார்க் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மிக விரைவில் இந்த பிளாஸ்டிக் பார்க் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் நாடு சீனா..

கடந்த வருடம் பிளாஸ்டிக் மூலப் பொருள்களின் ஏற்றுமதி 3.29 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்தது.

இதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக்கில் இருந்து மோல்ட் செய்யப்பட்ட பொருள்கள், பிளாஸ்டிக் பிலிம் ரோல், மோல்ட் செய்யப்பட்ட மென்மையான சூட்கேஸ், எழுது பொருள்கள், பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள், பிவிசி குழாய்கள், பிளாஸ்டிக் ஷீட்ஸ், பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட பேக்கிங் பொருள்கள், சானிட்டரி பொருள்கள், எலக்ட்ரிக்கல் உபகரணங்கள், மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் பொருள்கள், தார்பாலின், லேமினேட் செய்ய உபயோகப்படும் உபகரணங்கள், மீன் வலைகள் போன்ற பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிக அளவில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கிடைப்பதை நமது அதிக ஏற்றுமதிக்கு காரணம்.

பிளாஸ்டிக் மூல பொருட்களுக்காக நாம் இறக்குமதியை நம்பி இருக்க வேண்டியதில்லை.

ஆனால் நம்மிடமிருந்து பிளாஸ்டிக் மூலப் பொருளை இறக்குமதி செய்து சைனா குறைந்த விலையில் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொம்மைகளை உற்பத்தி செய்து நமக்கு மீண்டும் ஏற்றுமதி செய்கிறது.

பிளாஸ்டிக் மூலப்பொருள் என்பது, பிளாஸ்டிக் polypropylene, பாலி எத்திலின், போன்றவையாகும்.

பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு இந்தியா முழுவதும் பத்து பிளாஸ்டிக் பார்க்களை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

இதில் 6 பார்க்குக்கு முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அசாமில் 1, மத்திய பிரதேசத்தில் 2, ஒடிசா, தமிழ்நாடு, மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 1 என பிளாஸ்டிக் பார்க்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா.  இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு ஜெர்மனி. மூன்றாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. நான்காம் இடத்தில் இத்தாலி உள்ளது. ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இருபத்தி எட்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.


#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments