மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் இந்திய வெளிநாட்டு வர்த்தக கொள்கை..
ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒரு முறையும் வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாற்றி அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் உலக அளவில் ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ப இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நாடுகளுடன் செய்து நமது ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகப்படுத்துகிறது.
புதிய நாடுகளுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு இன்னும் மேம்படுகிறது.
கடைசியாக நாம் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய நாள் ஏப்ரல் 1, 2020.
அப்போது இந்தியாவில் கோரனோ தீவிரமாக பரவி கொண்டிருந்ததால் இந்த முடிவு அடுத்த ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 2021, அன்று நாம் புதிய வர்த்தக கொள்கையை அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மீண்டும் இரண்டாம் அலை பரவத் துவங்கியது எனவே அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி புதிய வர்த்தகக் கொள்கை அமலாகும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசிடம் இருந்து வேறு ஒரு அறிவிப்பு வந்தது.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள RoDTEP மற்றும் PLI திட்டங்கள் நமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் எம்மாதிரியான தாக்கங்களை உருவாக்குகிறது என்பதை மத்திய அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
இதன் நிறை குறைகளை ஆராய்ந்து புதிய வெளியுறவுக் கொள்கை ஏப்ரல் 1, 2022, அன்று வெளியாகும் என மத்திய அரசு அறிவித்து விட்டது.
அதுவரை பழைய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அமலில் இருக்கும்...
டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணிற்கு FREE EXPORT SEMINAR என்று வாட்ஸ்அப் செய்யுங்கள்.
#consultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment