அரிசி வர்த்தகத்தில் நஷ்டமடைந்த இந்திய ஏற்றுமதியாளர்

உலகிலேயே அரிசி ஏற்றுமதியில் பல நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவைப் போலவே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்.

இந்தியாவிலிருந்து வியட்நாமுக்கு சமீபத்தில் சுமார் 500 டன்கள் அளவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பல் வியட்நாமை அடைந்து விட்ட பிறகும் ஏற்றுமதியாளர் சரியான நேரத்திற்கு டாக்குமென்ட்களை இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்ப முடியவில்லை.

ஒருவழியாக டாக்குமென்ட்களை அவர் அனுப்பிய பிறகு வியட்நாமில் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கி விடுமுறை இருந்தது.

சரக்கு துறைமுகத்தில் இருந்தாலும் ஏற்றுமதியாளரின் தாமதம் மற்றும் வியட்நாமில் வங்கி விடுமுறை போன்றவற்றால் இறக்குமதியாளர் சரியான நேரத்திற்கு டாக்குமென்ட்களை பெறமுடியவில்லை மற்றும் பொருளை எடுக்க முடியவில்லை.

இதனால் தண்டம் கட்ட வேண்டிய நிலைக்கு இறக்குமதியாளர் தள்ளப்பட்டார்.

இதற்கு தான் பொறுப்பல்ல என்பதை இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் இடம் கூறி தண்டச் செலவை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தன் மீது தவறு இருப்பதை உணர்ந்து ஏற்றுமதியாளர் டன் ஒன்றுக்கு நூறு டாலர்கள் தண்டமாக ஏற்றுக்கொண்டார்.

விளைவு லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்பட்டது.

ஏற்றுமதியில் சரியான நேரத்திற்கு பொருளை அனுப்புவது முக்கியம் என்றால் அதைவிட முக்கியம் சரியான நேரத்திற்கு ஆவணங்களை இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்புவது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் எங்களது ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments