தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான்.. ஏற்றுமதியாளர்கள் செய்ய வேண்டியது என்ன? FIEO அறிக்கை...
இந்த உலகில் யாருமே எதிர்பாராத நிலையில் ஒரே நாளில் ஆப்கானிஸ்தானில் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
காபூல் நகரம் தலிபான்கள் பிடிக்குள் வந்துள்ளது.
தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவரும் நாட்டை விட்டு வெளியேறினர்.
அவர்கள் இருவரும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த அரசியல் மாற்றத்தை இந்தியா மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை பில்லியன் டாலர்கள்.
இந்த இரு நாட்டு வர்த்தகத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
புதிதாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் அங்கு உள்ள சூழலை கண்காணித்து செயல்படுமாறு FIEO அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமாக பணப் பரிமாற்றத்தில் மிகுந்த கவனம் தேவை என்றும் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலத்தால் சூழப்பட்ட நாடு.
கடல் வழி ஏற்றுமதி அங்கு சாத்தியமில்லை.
நிலத்தின் வழியாகவும் விமானம் மூலம் மட்டுமே அங்கு வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது விமான நிலையம் மற்றும் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
வர்த்தகம் கேள்விக் குறியாய் உள்ளது.
இந்தியாவிலிருந்து தேயிலை, காபி கொட்டைகள், மிளகு மற்றும் காட்டன் போன்றவை ஏற்றுமதியாகின்றன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நாம் அதிக அளவில் உலர்ந்த பழங்களை இறக்குமதி செய்கிறோம்.
குறிப்பாக வால்நட், பாதாம், அத்திப்பழம், பைன் நட், ஆப்ரிக்காட், செர்ரி பழங்கள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளை இறக்குமதி செய்கிறோம்.
அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment