இலங்கைக்கு நாம் எதை ஏற்றுமதி செய்யலாம்?

இலங்கைக்கு நாம் எதை ஏற்றுமதி செய்யலாம்?

தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு நட்பு ரீதியான ஒரு ஏற்றுமதி நாடு என்றால் இலங்கை.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதியை பெருமளவு கட்டுப்படுத்தியது.

இந்த இறக்குமதி தடை அல்லது கட்டுப்பாட்டுக்கு முக்கியமான காரணம் இலங்கை நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக பெருமளவு வீழ்ச்சி அடைந்ததே.

இதன் மூலம் பெருமளவு பாதிக்கப் பட்டவர்கள் தமிழக ஏற்றுமதியாளர்கள்.

மிளகாய், மஞ்சள், உருளைக்கிழங்கு போன்ற பல விவசாய பொருட்களை பெருமளவில் தமிழக ஏற்றுமதியாளர்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.

இறக்குமதி தடையால் இலங்கையில் மஞ்சள் போன்ற பல விவசாய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது.

விலை உயர்வால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது உள்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விவசாய உற்பத்திக்கு மிகமுக்கியமான உரம் இலங்கையில் அதிகமாக கிடைக்காது.

உரத்திற்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளை நம்பியே உள்ளது இலங்கை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கை அரசு உர இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது.

ஒருபுறம் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நேரம் உர இறக்குமதிக்கு தடை விதித்து இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு உர இறக்குமதியில் விரைவில் அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.

முக்கியமாக ரசாயன உரத்தை சீனாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இயற்கை உரத்தை இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நீண்ட நாட்களாக ஏற்றுமதி செய்ய முடியாமல் இருந்த தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் குறைந்த விலையில் இயற்கை உரம் கிடைக்கும்.

போக்குவரத்து செலவும் குறைவு.

இது இலங்கைக்கு மட்டுமல்ல தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.


எங்களது ஆன்லைன் ஏற்றுமதி பயிற்சி  வகுப்பு பற்றி அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.

#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்

Comments