உலக உற்பத்தியில் 24% தமிழகத்தில் விளைகிறது... ஏற்றுமதி செய்ய தயாராகுங்கள்...
தமிழக அரசு சமீபத்தில் விவசாய பட்ஜெட் கொண்டு வந்தது.
அதில் முருங்கை ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முருங்கை ஏற்றுமதி மையமாக அறிவிக்கப்பட்டன.
மதுரையில் சிறப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையம் மேற்கூறிய அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து முருங்கை விவசாயத்திலிருந்து ஏற்றுமதி வரை அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும்.
ஏற்றுமதி தரத்தில் முருங்கை விவசாயம் செய்வது எப்படி என்று விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கும்.
முருங்கையை சுமார் 30 வகைகளில் மதிப்பு கூட்ட முடியும்.
முருங்கை மதிப்புக்கூட்டல் பயிற்சியும் இந்த மையம் தொழில் முனைவோருக்கு கற்றுக்கொடுக்கும்.
மதிப்பு கூட்டப்பட்ட முருங்கையை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றி அறிவுரை மற்றும் பயிற்சி வழங்கும்.
ஏற்றுமதி மார்க்கெட் பற்றி விரிவாக விளக்கம்.
இந்த மையத்தின் முக்கிய நோக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் முருங்கை ஏற்றுமதி மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்பதே.
தற்போது முருங்கை விவசாயம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதை 50 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விரிவு செய்வதும் ஒரு நோக்கமாகும்.
மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொருட்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் மற்றும் சீனா.
முருங்கையின் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் முருங்கையில் இருந்து தயாரிக்கப்பட்ட கால்நடை தீவனங்கள் பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் இந்த முருங்கை கால்நடை தீவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு எதிர்காலத்தில் பிரகாசமாக உள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை முக்கியமாக நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி 1
சமைப்பதற்கு தயாராக உள்ள முருங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்: முருங்கை பவுடர் மற்றும் முருங்கை தேனீர்.
பகுதி 2
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொருள்கள்: முருங்கை சாக்லேட் முருங்கை கேக் மற்றும் முருங்கை ஜூஸ் வகைகள்.
பகுதி 3
உடல் எடையை குறைக்கக்கூடிய முருங்கை கொடியிலிருந்து செய்யப்பட்ட முருங்கை கேப்ஸ்யூல்ஸ் மற்றும் முருங்கை டேப்லெட்கள்.
பகுதி 4
முருங்கையில் இருந்து தயாரிக்கப்பட்ட கால்நடை தீவனங்கள்.
முருங்கை ஆயில் மற்றும் முருங்கை விதைகள் சைனாவில் அதிக அளவு வாங்கப்படுகின்றன.
முருங்கை தேனீர் மற்றும் மருந்து வடிவிலான முருங்கை பவுடர் வட அமெரிக்க நாடுகளில் எடை குறைப்பிற்காக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
முருங்கை ஏற்றுமதிக்காக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் பங்குபெற்று மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொருள்களை ஏற்றுமதி செய்து வளம் பெற முடியும்.
அடுத்த மாதம் எங்களது ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பயிற்சி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
#exportbusiness #export #business #exportbusinesstamil #exportimportbusiness #exportimport #exportbusinessindia #exportproducts #indianexporters #apeda #spicesboard #letterofcredit #telegraphictransfer #exportpayment #exportquotation #exportconsultant #internationaltrade #triangletrade #exporttamil #exportcontainer #exportcha #exporttraining #exportcoachingcenter #exportguidance #import #importbusiness #importbusiness #eximbusinessb#exportlicence
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment