எங்கு வாய்ப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை சரியான வழியில் செயல்படுத்தி இருக்கிறது ரஷ்யாவின் சுற்றுலாத்துறை.
இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு தடுப்பு ஊசி சுற்றுலா என்ற ஒரு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது ரஷ்யா.
இந்த இருபத்தி நான்கு நாட்கள் தடுப்பூசி சுற்றுலாவில் ரஷ்யாவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை பார்வையிடுதல் உட்பட இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்படும்.
டெல்லியில் இருந்து ரஷ்யா சென்று திரும்புவதற்கான விமான டிக்கெட், ரஷ்யாவில் மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் செலவு, சுற்றுலா தலங்களுக்கு செல்லும் செலவு உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
காலை & இரவு உணவும் இதில் அடங்கும்.
ஒரு நபர் சென்று வர கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம்.
விசா செலவு ரூபாய் பத்தாயிரம் தனி.
ஒரு பேக்கேஜில் 30 நபர்கள் கலந்து கொள்ளலாம்.
மே மாதம் 29ஆம் தேதி ஒரு குழு சென்றுள்ளது.
ஜூன் 7 மற்றும் ஜூன் 15ஆம் தேதி அடுத்தடுத்து குழுக்கள் செல்ல இருக்கின்றனர்.
Comments
Post a Comment