சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் என்பது ஏற்றுமதியில் மிக முக்கியமான ஒரு சான்றிதழ்.
இந்தியாவும் ஒரு நாடும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது பல பொருள்களுக்கான இறக்குமதி வரி பெருமளவு அந்த நாட்டில் குறைக்கப்படுகிறது அல்லது முழுமையாக நீக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்பவர் மேற்கண்ட சான்றிதழை சுங்கத் துறையிடம் சமர்ப்பிப்பதன் மூலம் இறக்குமதி வரி செலுத்தாமல் அவர் நாட்டிற்குள் பொருளை எடுத்து செல்ல முடியும்.
இப்படி ஒப்பந்தம் இருக்கும் நாடுகளில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இந்த சான்றிதழை கண்டிப்பாக கேட்பார்கள்.
இந்தச் சான்றிதழ் பெரும்பாலும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெற்று கொள்ளலாம்.
இந்த சான்றிதழ் வாங்குவதற்கு அதிகபட்சம் இரண்டு நாள் வரை ஆகலாம்.
தற்போது FIEO ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் ஆன்லைன் மூலமாகவே இந்த சான்றிதழை நீங்கள் விண்ணப்பித்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இது இந்திய ஏற்றுமதியாளர்கள் இடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
Comments
Post a Comment