இந்தியாவிலிருந்து கொசு வலைகள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2019-2020 காலகட்டத்தில் 54.42 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து கொசு வலைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் நைஜீரியா, எத்தியோப்பியா, கென்யா, காங்கோ & மொசாம்பிக்.
இது போன்ற நாடுகளில் வியாபாரம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சில நேரங்களில் போலியான LC மூலம் நீங்கள் ஏமாந்து போக வாய்ப்பு இருக்கிறது.
LC தவிர வேறு எந்த ஒரு பணப் பரிமாற்றத்திற்கும் ஒத்துக் கொள்ள வேண்டாம்.
LETTER OF CREDIT பெரும் போது உங்கள் வங்கியின் மூலம் COUNTER VERIFICATION செய்துகொள்வது பாதுகாப்பான நடைமுறையாகும்.
அதேவேளையில் பல்வேறு நல்ல இறக்குமதியாளர்கள் இந்த நாட்டில் உண்டு.
Comments
Post a Comment