உலகில் பல்வேறு நாடுகள் இந்தியர்கள் வருவதற்கு தடை விதித்து இருக்கின்றன.
இந்த விமானம் தரையிறங்க அனுமதி இல்லை.
ஆகவே விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்வது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நோய்த்தொற்று காலத்திலும் கோயம்புத்தூரிலிருந்து ஷார்ஜா வுக்கு விமானம் மூலம் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வாரம் இருமுறை ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
தற்போது பயணிகள் குறைவாக உள்ளதால் இதை வாரம் ஒருமுறை ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து மட்டுமே மக்கள் இந்தியாவுக்கு வர முடியும் இந்தியாவிலிருந்து மக்கள் செல்லமுடியாது.
ஆகவே இந்தியாவிற்கு வந்து திரும்பும் விமானம் காலியாகவே செல்கிறது.
காலியாக செல்லும் விமானத்தில் சுமார் 7 முதல் 8 டன்கள் அளவிற்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள், எண்ணெய் வகைகள், பழங்கள் மற்றும் பூக்கள் போன்றவை ஏற்றுமதி ஆகின்றன.
காளி இருக்கைகளில் சரியான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட இந்த பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
பயணிகள் நிரம்பி இருந்தால் ஒரு விமானத்தில் அதிகபட்சமாக 3 டன்கள் அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment