வளைகுடா நாடுகளில் புகழ் பெற்ற LULU ஹைப்பர் மார்க்கெட் மாம்பழ கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு வகையான மாம்பழங்களை காட்சிப் படுத்தி வருகிறது.
இந்த கொண்டாட்டம் சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கொலம்பியா, பிரேசில், சூடான், ஏமன், தாய்லாந்து, கென்யா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் இருந்து 46 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 36 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாம்பழ கொண்டாட்டத்தில் அதிக அளவில் இந்திய மாம்பழங்களை காட்சிப்படுத்தப்பட்டன.
மாம்பழங்கள் மட்டுமல்லாது மாம்பழ பாயசம், மாம்பழம் ரைத்தா மற்றும் மாம்பழ கேசரி போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த கண்காட்சியை துவக்கி வைத்ததுகத்தார் நாட்டைச் சேர்ந்த இந்திய தூதுவர் திரு தீபக் பட்டேல் அவர்கள்.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு மாம்பழ ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும்.
Comments
Post a Comment