விவசாய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மற்றும் பூக்கள் போன்றவற்றை தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது சவாலானது.
இதுபோன்ற ஏற்றுமதியில் அவை விரைவில் கெட்டுப்போக வாய்ப்புண்டு .
இதற்கு ஒரு சீன நிறுவனம் தீர்வை கண்டுபிடித்துள்ளது.
சர்க்கரை போன்ற வெள்ளை நிற ஒரு ரசாயனப் பொடி இதற்கு தீர்வாக அமைகிறது.
குளிரூட்டப்பட்ட அறையில் காய்கறிகள் அல்லது பழங்களை வைக்கும்போது அல்லது விமான சரக்கு போக்குவரத்தின் போது பூக்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் உள்ளே வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இந்த ரசாயன பொடியை கலந்து வைத்து விட்டால் சில நிமிடங்களில் அவை ஆவியாகி அந்த அறை முழுவதும் நிரம்பி விடும்.
இப்படி நிரம்பிய ஆவி அந்த பொருளை அவ்வளவு எளிதில் பழுக்க விடாது. இவை பூக்களில் உபயோகப்படுத்தப்படும் போது எளிதில் அந்த மலர்கள் மலராது.
இதன்மூலம் ஏற்றுமதியில் பெரும் மாற்றம் ஏற்படலாம்.
மதுரையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூ அமெரிக்கா சென்றடையும் வரை பூக்காமல் மொட்டாகவே இருப்பதற்கான வாய்ப்பு கைகூடி வருகிறது.
இப்போதைக்கு இந்த பொருளை சர்வதேச அளவில் பயன்படுத்த அனுமதி இல்லை, சீனாவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்த ரசாயனத்தை பயன்படுத்த அனுமதி கிடைக்கும் போது நிச்சயமாக ஏற்றுமதியில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணும்.
இந்தப் பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் இணையதள முகவரி..
Comments
Post a Comment