இந்திய மாம்பழங்களை வாங்குவதற்காக அமெரிக்காவும் கனடாவும் காத்துக்கொண்டிருக்கின்றன.
மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்வது போல் மாம்பழங்களை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் நாம் ஏற்றுமதி செய்துவிடமுடியாது.
அமெரிக்காவில் இதற்கென்று தனிப்பட்ட தரச்சான்றிதழ் நடைமுறையில் உள்ளது.
அதன் பெயர் USDA-APHIS சான்றிதழ் ஆகும்.
ஒரு குறிப்பிட்ட கதிர்வீச்சை மாம்பழங்கள் மேல் செலுத்தி தர நிர்ணயம் செய்து இந்த சான்றிதழ் பெறப்படுகிறது.
இந்த தர நிர்ணயம் மற்றும் சான்றிதழ் வழங்குவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு அதிகாரி வரவேண்டும்.
தற்போது சுமார் 60 நாடுகளில் இந்தியாவிலிருந்து மற்றும் இந்தியாவுக்கு விமான போக்குவரத்தை தடை செய்திருக்கின்றன. (அமெரிக்கா உட்பட)
அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூட்டாக அமெரிக்க அரசிடம் இது சம்பந்தமாக ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்க அரசு இதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் சுமார் 3 மாதங்களுக்கு மாம்பழ ஏற்றுமதி அதிகரிக்கும்.
Comments
Post a Comment