சரியும் கொய்மலர் ஏற்றுமதி

சரியும் கொய்மலர் ஏற்றுமதி..

சுமார் ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்றுமதிக்கான கொய்மலர் சாகுபடி ஓசூர் பகுதியில் நடைபெறுகிறது.

அன்னிய செலாவணியை அள்ளித் தருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு தந்துள்ளன.

குறிப்பாக சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மிகுந்த லாபத்தில் சென்றுகொண்டிருந்த இந்தத் தொழில் தற்போது சிறிது சிறிதாக வீழ்ச்சி அடைகிறது.

2015 - 2016 காலகட்டத்தில் 22 ஆயிரம் டன்கள் கொய்மலர் ஏற்றுமதி நடந்துள்ளது.

2016 - 2018 காலகட்டத்தில் 20,000 டன்கள் ஏற்றுமதி ஆனது.

2018 - 2019 காலக்கட்டத்தில் 19,000 டன்களாக அது குறைந்தது.

2019 2020 காலகட்டத்தில் 14 ஆயிரத்து 385 டன்களாக அது மேலும் குறைந்தது.


2020 2021 காலகட்டத்தில் சுமார் 5000 டன்களுக்கும் கீழே சென்றது.

இதற்கான சரியான காரணங்களை ஆராய்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத வரை இந்த தொழில் மேலும் பாதிக்கப்படும்.

ஏனென்றால் மலர்கள் ஏற்றுமதியில் நமக்கு போட்டியாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

Comments