சர்வதேச வர்த்தகத்தில் சீனா எப்படி சர்வாதிகார தன்மையோடு நடந்து கொள்கிறது..

இந்த உலகில் சர்வதேச வணிகத்தில் சீனா எப்படி சர்வாதிகார தன்மையோடு எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

உலகத்தில் இரண்டாவது மாம்பழ ஏற்றுமதியாளர் சீனா.

எந்தெந்த நாடுகள் எந்தெந்த வகையான மாம்பழங்களை விரும்புகின்றன என்று அறிந்து அவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்கிறது.

அதேசமயம் உள்நாட்டில் மக்கள் தேவைக்காக இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது கம்போடியா.

கம்போடியா பழங்கள் ஏற்றுமதியில் மிகவும் முக்கியமான நாடு.

கம்போடியாவின் பழைய ஏற்றுமதியில் முன்னணி வகிப்பது வாழைப்பழம், இரண்டாம் இடத்தில் இருப்பது மாம்பழம்.

கம்போடியா சீனாவுக்கு மாம்பழ ஏற்றுமதி செய்வதற்காக சுமார் மூன்று வருடங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தது.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து தற்போது ஒரு வருடத்திற்கு 5 லட்சம் டன்கள் அளவிற்கான மாம்பழங்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் டன்கள் அளவிற்கு மாம்பழங்களை கம்போடியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 239 சதவீத வளர்ச்சி.

இந்த கம்போடியா சீனா மாம்பழ வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு வியட்நாம்.

வியட்நாமின் ஒட்டுமொத்த மாம்பழ ஏற்றுமதியில் 70% வாங்கிக் கொண்டிருக்கும் நாடு சீனா.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2020இல் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 2 ஆர்டர்களை தரத்தை காரணம்காட்டி திருப்பி அனுப்பியது சீனா.

இதற்கு முக்கிய காரணம் மாம்பழங்களின் தரமல்ல, சில அரசியல் காரணங்கள் என்று கூறுகிறார்கள்.

கம்போடியாவில் இருந்து மாம் பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதால் வியட்நாம் சீனா மாம்பழ வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள் வர்த்தகர்கள்.

Comments