இந்திய மாம்பழங்களை வாங்க வரும் புதிய நாடு

இந்திய மாம்பழத்தை வாங்க ஆர்வம் காட்டும் புதிய நாடு.

ஆந்திர மாநிலத்தில் விளைவிக்கக்கூடிய பங்கனப்பள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக தென் கொரியாவில் இருந்து இந்த குறிப்பிட்ட மாம்பழ ரகத்தை வாங்க நிறைய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

முதல் ஏற்றுமதி சுமார் இரண்டரை டன் அளவிற்கான பங்கனப்பள்ளி மாம்பழம் தென் கொரியாவிற்கு அனுப்பப்பட்டது.

இந்த வருட பங்கனப்பள்ளி மாம்பழத்தின் ஏற்றுமதி 66 டன்னாக இருக்கும் என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பல்வேறு மற்ற ரகங்கள் இதுவரை 26 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

நியூசிலாந்து ஜெர்மனி இங்கிலாந்து அயர்லாந்து போன்ற நாடுகள் ஆந்திராவிலிருந்து பங்கனப்பள்ளி அல்லாத மற்ற பாகங்களை வாங்கி உள்ளன.

பங்கனப்பள்ளி அல்லாத மற்ற ரகங்களின் ஏற்றுமதி சுமார் 300 டன் அளவிற்கு இருக்கும் என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.

சென்ற வருடம் பங்கனபள்ளி அல்லாத மற்ற ரகங்களின் ஏற்றுமதி 60 டன் மட்டுமே.

இந்த வருடம் நோய்த்தொற்று இருந்தாலும் சரியாக திட்டமிட்டு சுமார் 300 டன் அளவிற்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments