ஏற்றுமதி தொழில் ஆரம்பிக்க இது சரியான தருணமா?

இந்த நோய்த்தொற்று காலத்தில் ஏற்றுமதி தொழில் ஆரம்பிக்கலாமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

அந்த சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு தரவு வந்திருக்கிறது.

2020 ஏப்ரல் மாதம் நாம் செய்த ஏற்றுமதி மதிப்பு 10.17 பில்லியன் டாலர்கள்.

2021 ஏப்ரல் மாதம் நாம் செய்த ஏற்றுமதியின் மதிப்பு 30.21 பில்லியன் டாலர்கள்.

இது மட்டுமல்லாமல் வேறு ஒரு தரவும் வந்திருக்கிறது.

மே மாதம் 1 முதல் 7-ஆம் தேதி வரை 2020இல் நாம் செய்த ஏற்றுமதியின் மதிப்பு 3.91 பில்லியன் டாலர்கள்.

மே மாதம் 1 முதல் 7-ஆம் தேதி வரை 2021ல் நாம் செய்த ஏற்றுமதியின் மதிப்பு 6.48 பில்லியன் டாலர்கள்.

தீவிரமான நோய் தொற்று காலத்திலும் நாம் ஏற்றுமதியில் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பது உங்களுக்கு நம்பிக்கை தரும் என்று நினைக்கிறேன்.

அதிக அளவில் ஏற்றுமதியில் நாம் வளர்ந்ததற்கு உறுதுணையாக இருக்கும் துறைகளை பின்வருமாறு
நவரத்தின கற்கள் மற்றும் நகைகள்.
சணல்
தரை விரிப்புகள்
கைவினைப் பொருட்கள்
தோல் பொருள்கள்
மின்னணு சாதனங்கள்.
எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள்.
முந்திரி பருப்பு
இன்ஜினியரிங் பொருட்கள்
பெட்ரோலியப் பொருள்கள்
கடல் உணவு பொருள்கள்
ரசாயனப் பொருள்கள்.

Comments