பருவ மழை பொய்த்து போவதால் அடிக்கடி வெங்காய உற்பத்தி இந்திய அளவில் பாதிக்கப்படுகிறது.
இதனால் வெங்காய விலை அதிகமாகிறது.
சில நேரம் இதனால் வெங்காய ஏற்றுமதிக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இப்படி வெங்காய ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்படுவது சமீபத்தில் அடிக்கடி நடக்கிறது.
உலகில் பல நாடுகளில் இந்திய வெங்காயத்தையும் நம்பி உள்ளன.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை படும் போதெல்லாம் இந்திய வெங்காய ஏற்றுமதி மார்க்கெட்டை கைப்பற்றுவதற்கு பல நாடுகள் முயல்கின்றன.
இதை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு தற்போது ஒரு முடிவெடுத்துள்ளது.
தற்போது அதிக அளவில் வெங்காயத்தை பயிரிடும் மாநிலங்கள் கர்நாடகா மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேஷ்.
புதிதாக 5 மாநிலங்களில் சுமார் 9 ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்றுமதி தரம் வாய்ந்த வெங்காயத்தை பயிரிட மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
அவை முறையே ராஜஸ்தான் ஹரியானா மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்.
இந்த மாநிலங்களில் எதிர்காலத்தில் வெங்காயம் பயிரிடப்படும் போது ஓரிடத்தில் விளைச்சல் குறைந்தாலும் வேறு ஒரு இடத்தில் வெங்காயம் அபரிமிதமாகக் கிடைக்கும்.
விலை சமநிலையாக இருக்கும்.
ஏற்றுமதி தடை செய்யப்படாது.
Comments
Post a Comment