இந்தியாவில் இருந்து அதிக பொருட்கள் ஏற்றுமதி ஆனாலும் இறக்குமதியிலும் நாம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உண்டு.
சமீபத்தில் இந்திய அரசும் பிரிட்டன் அரசும் ஒரு வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டன.
அந்த உடன்படிக்கையின்படி பிரிட்டனில் இருந்து ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்றவற்றை சுங்க வரி செலுத்தாமல் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும்.
இதுவரை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு ஆப்பிள் வகைகள் இந்தியாவில் கோலோச்சி வந்தன.
இந்த பிரிட்டன் ஆப்பிள் பார்ப்பதற்கு இந்திய ஆப்பிள் போலவே இருப்பதால் மக்களால் அதிகம் விரும்பி வாங்க வாய்ப்புண்டு என்று பிரிட்டனில் அதிக அளவு ஆப்பிள் மற்றும் பேரிக்காய் வகைகளை பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே வளைகுடா நாடுகளுக்கும்மற்ற சில நாடுகளுக்கும் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவிலிருந்து வர்த்தக விசாரணைகளை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் இணையதள முகவரி இதோ: https://www.acgoatham.com/
Comments
Post a Comment