இந்தியாவிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்யும் டென்மார்க்

தற்போது அதிக அளவில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற சிறந்த ஆர்கானிக் உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

நமது பாரம்பரிய சிறு தானிய வகைகளான ராகி மற்றும் குதிரை வாலி போன்ற வற்றை டென்மார்க் நாடு இறக்குமதி செய்கிறது.

இந்த ரகங்கள் இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் பயிரிடப்படுகிறது.

எந்த ஒரு செயற்கை உரமும் உபயோகப் படுவதில்லை.

இமயமலை பனிக்கட்டி உருகி நீராக வழிந்தோடும் தண்ணீர் மூலம் இந்த சிறு தானியங்களின் விவசாயம் நடைபெறுகிறது.

இப்படி விளையும் ராகி மற்றும் குதிரைவாலியின் தரம் ஐரோப்பிய நாடுகள் ஆர்கானிக் பொருள்களுக்காக நிர்ணயித்துள்ள தரத்தை விட மேம்பட்டதாக உள்ளது.

APEDA உத்தரகாண்டில் உள்ள விவசாயிகள் கூட்டமைப்புடன் இணைந்து டென்மார்க் ஏற்றுமதியை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

டென்மார்க்கில் உள்ள இறக்குமதியாளர்கள் முதல் கட்டமாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ராகி மற்றும் குதிரைவாலி வாங்க முடிவு செய்துள்ளனர்.

Comments