கைவிட்ட ஏற்றுமதி... மாற்றுத் தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் விவசாயிகள்

கேசர் மாம்பழங்கள் சுவை மிகுந்தவை.

இவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

உள்நாட்டில் கிடைப்பது மிகமிக அரிது.


குஜராத்திலும் அவுரங்காபாத்தில் இதுபோன்ற மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் கேசர் மாம்பழங்களை பயிரிடும் விவசாயிகளின் கூட்டமைப்பு ஏற்றுமதியாளர்களை அழைத்துப் பேசி ஒரு குறிப்பிட்ட விலையில் அவர்களுக்கு கொடுத்து விடும்.

இந்த வருடம் பருவம் தப்பிய மழை காரணமாக விளைச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் உடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

நோய்தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகள் மாம்பழங்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இருக்கின்றன.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் கூட்டமைப்பு ஒரு புதிய யுக்தியை கையில் எடுக்க முடிவு செய்தது.

அதன்படி இந்த வருடம் கேசர் மாம்பழங்களை ஆன்லைன் மூலம் நேரடியாக மக்களுக்கு சில்லரை விற்பனை செய்வது என்று முடிவெடுத்தனர்.

மே மாதம் இறுதி வாரத்தில் அறுவடை செய்யப்படும் கேசர் மாம்பழங்கள் மற்றும் குஜராத்தில் உள்ள மக்களுக்கு இந்த வருடம் கிடைக்கும்.

சுவை மிகுந்த இந்த மாம்பழங்கள் இம்முறை மக்களுக்கு நேரடியாக ஏற்றுமதி தரத்தில் விநியோகிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

Comments