ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 95 சதவீதத்தை வாங்கும் ஒரே நாடு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பல்வேறு விவசாய பொருட்களில் முக்கியமான ஒன்று பேபி கார்ன்


இந்தியாவில் வருடம் முழுவதும் கிடைக்கும் பேபிகார்ன் சில மாநிலங்களில் கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளைச்சல் சிறிது குறையலாம்.  ஆனால் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் பேபி கான் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

வருடம் முழுவதும் கிடைப்பதால் பெரும்பாலும் விலையில் ஏற்ற இறக்கம் இருக்காது.

மும்பையைச் சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம் மாதம் 200 டன் அளவிற்கு பேபி கார்ன் ஏற்றுமதி செய்கிறது.

அவற்றில் பெரும்பாலானவை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதி தரவுகளும் இதையே குறிப்பிடுகின்றன.  இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஓட்டுமொத்த பேபி கார்னில் 90 முதல் 95 சதவீதம் வரை மட்டுமே வாங்குகிறது.

புதிய ஏற்றுமதியாளர்களுக்கு எது ஒரு முக்கியமான தகவலாகும்.

ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 95% ஒரு நாடும் மற்றவை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் வாங்குகின்றன என்றால் பிரிட்டனில் எவ்வளவு பெரிய தேவை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Comments