ஒரு வருடத்தில் 7964 கன்டெய்னர்கள் ஏற்றுமதியான ஒரே பழம்..
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெங்காயம்தான்.
அதிக அளவில் இங்கிருந்துதான் வெங்காயம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
தற்போது நாசிக் நகருக்கு வேறு ஒரு புகழ் வந்து சேர்ந்திருக்கிறது.
நாசிக் நகரம் திராட்சை ஏற்றுமதிக்கும் புகழ்பெற்றதாக உருவாகி வருகிறது.
கடந்த வருடம் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 6 ஆயிரம் டன்கள் அளவுக்கு திராட்சை 7964 கண்டைனர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் ஏற்றுமதி ஆகியிருக்கிறது.
அதற்கு முந்திய வருடத்தில் 92,342 டன்கள் 6842 கண்டெய்னர்களில் ஏற்றுமதி ஆகியிருந்தது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த திராட்சையில் 90% நாசிக் நகரில் இருந்து மட்டுமே ஏற்றுமதி ஆகிறது.
இந்திய திராட்சை ஏற்றுமதியில் 64 சதவிகிதத்தை இறக்குமதி செய்வது நெதர்லாந்து நாடு.
அதற்கு அடுத்தபடியாக இறக்குமதி செய்யும் நாடு யுனைடெட் கிங்டம்.
ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அயர்லாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் திராட்சை இறக்குமதி செய்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களாக கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து திராட்சை ஏற்றுமதி ஆகவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்புவரை திராட்சை ஏற்றுமதியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இந்த மாநிலங்கள் கையில் வைத்திருந்தன.
Comments
Post a Comment