இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் அதற்கான மூலப்பொருளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
அப்படி இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களில் ஒருசிலவற்றை ஏற்றுமதி செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது.
சீரம் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்க அதிபருக்கு ட்விட்டர் மூலமாக ஒரு கோரிக்கை வைத்தார்.
இந்த உலகமே நோய் தொற்று காரணமாக அல்லல் படும் போது மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இது சம்பந்தமாக செய்தியாளர்கள் வெள்ளை மாளிகையில் கேள்வி எழுப்பியபோது அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஏற்றுமதி தடையை நீக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
இதுவே இந்தியாவில் மூலப்பொருள் இருந்து அமெரிக்கா தடுப்பூசி தயாரித்தால் என்ன நடக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment