ஈராக் மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகளும் எப்போதெல்லாம் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறதோ அப்போதெல்லாம் பெரிய அளவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டுகின்றன.
கடந்த வருடம் செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 31 வரை இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.
இந்த காலகட்டத்தில் இந்தியா வெங்காய ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயத்தை ஈராக் துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்தன.
ஜனவரி 12 ஆயிரத்து 21 அன்று ஏற்றுமதிக்கு தடை நீக்கப்பட்ட பிறகு இந்திய ஏற்றுமதியாளர்கள் திணறிப் போயினர். ஏனென்றால் ஏற்கனவே மேற்கூறிய மூன்று நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயம் பல நாடுகளில் கையிருப்பு இருந்தது அவை தீர்ந்த பிறகு அந்தந்த நாடுகள் எல்லாம் இந்தியாவிலிருந்து வெங்காயத்தை வாங்கத் துவங்கினர்.
பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.
இது போன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா தனது வெங்காய ஏற்றுமதி மார்க்கெட்டை இழக்கக்கூடும்.
நூறு வருடங்களுக்கு முன்பு சிகப்பு பயறு வகையை அதிக அளவில் ஏற்றுமதி செய்த இந்தியா இதுபோன்ற நடவடிக்கையால் இன்று இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலை வெங்காயத்திற்கு வேண்டாம்.
Comments
Post a Comment