இந்திய அளவில் அதிக மாம்பழம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கர்நாடகாவிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கர்நாடகா மாம்பழம் உற்பத்தி செய்கிறது.
2020ஆம் ஆண்டு நோய் தொற்று காரணமாக மாம்பழ விற்பனை மற்றும் ஏற்றுமதி கர்நாடகாவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இப்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் மீண்டும் நோய்த்தொற்றின் இரண்டாவது தாக்கம் அதிகரித்து வருவதால் கர்நாடக உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு உதவ கர்நாடகா அரசு முன்வந்துள்ளது.
மாம்பழ உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலமாக மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசு ஒரு புதிய இணையதளத்தை துவங்கியுள்ளது.
இதன் மூலம் பெங்களூரு நகரத்தில் உள்ள மக்கள் மாம் பழங்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த டெலிவரி சேவை இந்திய தபால் துறை மூலம் ஒருங்கிணைக்க படுகிறது.
Comments
Post a Comment