வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த சூழலில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வெங்காய இறக்குமதிக்கான விதிமுறைகளில் தளர்வை கொண்டு வந்தது.
ஆதலால் பல்வேறு இறக்குமதியாளர்கள் வெங்காயத்தை எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சுமார் 131 தன் வெங்காயம் எகிப்திலிருந்து வந்து சேர்ந்தது.
உள்நாட்டில் வெங்காய விலை கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மார்க்கெட்டில் சுமார் கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பதற்கு வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment