திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து, ஆர்பிட்ரேஷன் கவுன்சில் செயல்படுத்துகின்றன. தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு, இக்கவுன்சில், விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்துகிறது.கொரோனாவால், கடந்த ஆறு மாதமாக, கவுன்சில் கூடவில்லை. 


இந்நிலையில், கவுன்சில் நிர்வாக குழு கூட்டம், ஹார்வி ரோட்டில் உள்ள சைமா சங்க அரங்கில் நடந்தது.கவுன்சில் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:கொரோனா பரவல் உள்ளதால், ஆர்பிட்ரேசனின் பொதுக்குழு கூட்டத்தை, வரும் டிசம்பர் மாத இறுதியில் கூட்டவேண்டும்.சில ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், தரச்சான்று பெறாத நிறுவனங்களில் 'பிரின்டிங்' செய்துவிட்டு, சான்று பெற்ற நிறுவனங்களின் ரசீதை போலியாக இணைத்து, முறைகேடு செய்வதாக 'டெக்பா' சங்கம் புகார் அளித்துள்ளது.ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகர் ஆலோசனைப்படி, முறையாக தரச்சான்று பெற்ற நிறுவனங்களில் மட்டுமே 'பிரின்டிங்' செய்ய வேண்டும்.முறைகேட்டில் ஈடுபட கூடாது. இதுகுறித்து, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, அந்தந்த சங்கங்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer

Comments