இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 29.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகரித்து வருவதையடுத்து, இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.13,160.24 கோடியாக (1,764.06 மில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது.இவற்றின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் ரூ.10,187.04 கோடி (1,358.58 மில்லியன் டாலா்) அளவுக்கு இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாத ஏற்றுமதியானது 29.18 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது. ஆபரண ஏற்றுமதி: இருப்பினும், ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் ஆபரணங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது.
அதன்படி, கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.21,518.73 கோடியாக (3,018.32 மில்லியன் டாலா்) அதிகரித்து காணப்பட்ட நவரத்தின, ஆபரண ஏற்றுமதி நடப்பாண்டு ஆகஸ்டில் 38.84 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வைர ஏற்றுமதி: நறுக்கப்பட்ட மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் ரூ.11,661.03 கோடியிலிருந்து (1,638 மில்லியன் டாலா்) 22.16 சதவீதம் சரிவடைந்து ரூ.9,077.33 கோடியானது (1,216.79 மில்லியன் டாலா்). தங்க ஆபரணங்கள்: இதே காலகட்டத்தில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதியும் ரூ.6,919.28 கோடியிலிருந்து (967.42 மில்லியன் டாலா்) 66.25 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.2,335.22 கோடியானது (313.08 மில்லியன் டாலா்). அமெரிக்க, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் வா்த்தக நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதையடுத்து, சா்வதேச சந்தையில் இந்திய ஆபரணங்கள் மற்றும் வைரங்களுக்கான தேவை சூடுபிடித்து வருவதாக ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.
சா்வதேச நாடுகளில் வா்த்தகம் சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதன் காரணமாக, கடந்த 4-5 மாதங்களாகவே ஆபரண ஏற்றுமதி படிப்படியாக வளா்ச்சி கண்டு வருகிறது. நடப்பாண்டு ஏப்ரலில் வெறும் 36 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு தற்போது ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1,764.06 மில்லியன் டாலராக வளா்ச்சி பெற்றுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான வளா்ச்சியாகவே பாா்க்கப்படுகிறது. உள்நாட்டில் ஆபரண ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், வா்த்தக நடவடிக்கைகளும் வேகமாக இயல்பு நிலையை நோக்கி நகா்ந்து வருவதாக கொலின் ஷா தெரிவித்தாா்.நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.80,116.55 கோடியிலிருந்து (1,1478.14 மில்லியன் டாலா்) 43.59 சதவீதம் குறைந்து ரூ.45,189.76 கோடியாக (6,008.57 மில்லியன் டாலா்) உள்ளது.
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment