சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக கூட்டம் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் நடந்தது, இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்திய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த வர்த்தக கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அதிக அளவு மாதுளம்பழம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய மாம்பழம் மற்றும் இந்திய திராட்சை போன்றவற்றிற்கு ஆஸ்திரேலியா இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அதிக அளவிலான மாதுளம் பழங்களை அறுவடை செய்தாலும் அங்கு மாதுளம் பழத்திற்கு தேவை அதிகமாக இருப்பதால் அந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இந்த வர்த்தக வாய்ப்பை சில ஆசிய நாடுகள் கைப்பற்ற முனைந்த போதிலும் ஆஸ்திரேலியா நேரடியாக முன்வந்து இந்தியாவிற்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதைப்போல ஆஸ்திரேலியாவிலிருந்து வால்நட் மற்றும் பாதாம் பருப்பு போன்றவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவில் தயாராகும் உயர்ரக பார்லியில் இருந்து எடுக்கப்படும் பீர் வகைகளுக்கான இறக்குமதியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாதுளம்பழம் ஏற்றுமதி செய்பவர் ஆஸ்திரேலிய நாட்டை அணுக வேண்டிய சரியான சமயம் இது..
எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar
https://youtu.be/MohYXgZGHQc
#export #exports #exporter #Exportproducts #exporters #exportquality #exportproduct #exportfurniture #Exportnews #Exportdata #Exportdetails #exportimport #exportbusiness #exportjewellery #exportmanager #exportidea #exporttraining #exportevent #exporttamil #exportfromindia #exportopportunities #exportprice #exportloan #exportinsurance #exportimportdata #exportonion #Exportrice #exportwine #exportworldwide #exportbuyer
Comments
Post a Comment