ஐயாயிரம் கோடி முதலீட்டில் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலம்

சமீபத்தில் வானொலியில் பேசிய நமது பிரதமர் தஞ்சாவூர் பொம்மைகள் உட்பட இந்தியாவில் பொம்மைகள் உற்பத்தியாகும் பல்வேறு இடங்களைப் பற்றியும்  பொம்மைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.


மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பொம்மைகள் உற்பத்தி மற்றும் சந்தை சார்ந்த பொருளாதார சிறப்பு மண்டலத்தை கர்நாடகாவில் அமைக்க உள்ளது அதற்கான முன்னோட்டமே இந்த பேச்சு.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கர்நாடகா அரசு 400 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்குள் இந்த பொருளாதார சிறப்பு மண்டலத்தின் மூலமாக பொம்மைகளை உற்பத்தி செய்து சுமார் 2300 கோடி ரூபாய்க்கான சந்தையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் 40,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது சுமார் 18 சதவிகித வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எட்டும்போது கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த வளர்ச்சியாகும்.

சாதாரண பொம்மைக்கு 5000 கோடி ரூபாய் முதலீடு செய்வது என்பது உங்களுக்கு அதிகமாக தோன்றலாம் ஆனால் உண்மையில் உலக அளவில் பொம்மை வர்த்தக சந்தை 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும் அதை ஒப்பிடும்போது மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்த தொகை மிகவும் சிறியது.

நாம் இதுவரை பொம்மைகளை சீனாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம் மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் அந்த இறக்குமதி பெருமளவு அடுத்த ஐந்து வருடங்களில் குறைய வாய்ப்புள்ளது.

எங்களது பிரத்தியேக ஏற்றுமதி பயிற்சி வகுப்பை பற்றி அறிய - https://sites.google.com/view/exportconsultation/export-seminar

Comments